Wednesday, 23 July 2014

டிரக்ஸ் கேபிட்டல்' ஆக மாறும் கர்நாடகா


தகவல் தொழில் நுட்பத்தில் பிரபலமடைந்திருந்த கர்நாடகா, தற்போது, போதை பொருட்கள் வியாபாரத்தால், 'டிரக்ஸ் கேபிட்டல்' என்ற அவப்பெயரை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது. கர்நாடகாவில், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும், 14 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, போதை பொருள் வியாபாரம் நடந்துள்ளதாக, கலால் துறை கணித்துள்ளது.

போதை பொருள் விற்பனையும், கடத்தலும், கர்நாடகாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெங்களூரு, மங்களூரு, ஹூப்ளி - தார்வாட், பெல்காம், மைசூரு ஆகிய மாவட்டங்களில், போதை பொருட்கள் தாராளமாக புழங்குகின்றன. கர்நாடக மாநிலத்தில், கடந்த, 2010 - 11ல், 2,800 கோடி ரூபாய்; 2012 - 13ல், 4,700 கோடி ரூபாய்; 2013-14ல், 6,550 கோடி ரூபாய் மதிப்பிலான, போதை பொருள் விற்பனை, கடத்தல் நடந்துள்ளது என, கலால் துறை மதிப்பிட்டுள்ளது. இதே நிலை நீடித்தால், 'நாட்டின் டிரக்ஸ் தலைநகர்' என்ற, அவப்பெயர் கர்நாடகாவிற்கு கிடைக்கும். உள்நாடு மார்க்கெட்டில், ஒரு கிலோ, ஹெராயின், 1.5 லட்சம் ரூபாயாக உள்ளது; வெளிநாடுகளின் மார்க்கெட்டில், 50 - 75 லட்சம் ரூபாயாக விற்கப்படுகிறது. இதனால், கடத்தல் கும்பல், அதிகளவில், ஹெராயின், கோகென், அபீன், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை, கர்நாடகாவில் இருந்து, வெளிநாட்டுக்கு கடத்தி செல்கின்றனர்.

No comments:

Post a Comment