புதுடில்லி: உலகளவில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புள்ளி விவரஆய்வு தெரிவித்துள்ளது.
உலக அளவில் மக்கள் தொகை அடிப்படையில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது அனைவருக்கும் தெரிந்த விசயமே. அதே நேரத்தில் உலக அளவில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 315 மில்லியனாக உள்ளது என ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை கிட்டதட்ட அமெரிக்காவின் மக்கள் தொகைக்கு நெருக்கமாக உள்ளது.
அமெரிக்காவின் மக்கள் தொகை 318 மில்லியனாகும். சீனாவில் மாணவர்களின் எண்ணிக்கை 252 ஆக உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மாணவர்களின் எண்ணிக்கை உலகளவில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.
மேலும் இந்தியாவை பொறுத்த மட்டில் பகுதிநேர தொழிலில் ஈடுபடும் மாணவர்களின் எண்ணி்க்கை 9.5மில்லியனாக கூறப்பட்டுள்ளது.இருப்பினும் ஆறு மாதத்திற்கு மேல் ஒரு தொழிலில் நீட்டித்து இருப்பதி்ல்லை எனவும் தெரிவிக்கிறது.
அதிகரித்து வரும் கல்விக்கடன் மற்றும் குடும்பபொருளாதார நெருக்கடி போன்றவை காரணமாக பணியில் ஈடுபடும் மாணவர்களின் எண்ணிக்கையில் 60 சதவீதம் ஆண்களாகவும் மீதமுள்ளவை பெண்களாகவும் உள்ளதாகஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment