Wednesday, 23 July 2014

சிவசேனா எம்.பி.க்களின் செயல் அவர்களின் மனநிலையை காட்டுகிறது: கமல் நாத்

சிவசேனா எம்.பி.க்களின் செயல் அவர்களின் மனநிலையை காட்டுகிறது: கமல் நாத்
டெல்லியில் ரம்ஜான் நோன்பு இருந்த இஸ்லாமியர் ஒருவரை வற்புறுத்தி சப்பாத்தி சாப்பிட வைத்ததாக சிவசேனா கட்சி எம்.பி.க்கள் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மோசமாக நடந்துகொண்ட சிவசேனா எம்.பி.க்களுக்கு பிற கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட எம்.பி.க்களை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. 

இதுபற்றி காங்கிரஸ் தலைவர் கமல் நாத் கூறுகையில், “நோன்பு சென்றுகொண்டிருப்பது நம் அனைவருக்கும் தெரியும். எனவே, உணவைப் பற்றிய புகார் எழுப்ப வில்லை. நோன்பு இருந்தவரை சாப்பிடும்படி கட்டாயப்படுத்தியிருக்கிறார். இது அவர்களின் மனநிலையை காட்டுகிறது” என்றார்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நியமனம் தொடர்பான சர்ச்சையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிக்கியிருப்பது பற்றி கேட்டபோது, நீதிபதிகள் நியமனத்தில் இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு உள்ளது என்றார் கமல் நாத்.

No comments:

Post a Comment