ஐக்கிய நாடுகள் :'இந்தியாவில், ஜார்க்கண்ட், பீகார், சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா மாநிலங்களில் ஏராளமான சிறுவர், சிறுமியர் நக்சல் தீவிரவாதிகளால் பல கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர். பாதுகாப்பு படையினருக்கு எதிரான சண்டையின் போது, அவர்கள் மனித கேடயங்களாக பயன்படுத்தப்படுகின்றனர்' என, ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.'குழந்தைகளும் ஆயுத போராட்டங்களும்' என்ற தலைப்பிலான, ஐ.நா., பொதுச் செயலரின் ஆண்டறிக்கையில் மேற்கண்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் மற்றும் பள்ளி கட்டடங்களை தகர்க்கும் நக்சல்கள், தங்கள் அமைப்பில், சிறுவர், சிறுமியரை வலுக்கட்டாயமாக சேர்க்கின்றனர். 6 - 12 வயது வரையுள்ள சிறுமியர், பாலியல் பலாத்காரம் செய்யப்படுகின்றனர். அந்த கொடுமையை, யாராலும் தட்டிக் கேட்க முடியாத நிலை நிலவுகிறது.இந்தியா மட்டுமின்றி, சிரியா, ஈராக், தெற்கு சூடான் போன்ற நாடுகளிலும் இந்த கொடுமை உள்ளது என, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thursday, 3 July 2014
சிறுமியருக்கு நக்சல் கொடுமை :ஐ.நா., அறிக்கையில் தகவல்

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment