பாலைவன கப்பல் என்று போற்றப்படும் ஒட்டகங்கள், இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் அதிகமாக உள்ளது.
கடந்த சில வருடங்களாக அங்கு ஒட்டகங்கள் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது. இதனால் ராஜஸ்தானில் ஒட்டகங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விட்டது.
ஒட்டகங்கள் இனம் அழிந்து விடாமல் தடுக்க ராஜஸ்தான் மாநில அரசு திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக ஒட்டகத்தை ‘‘பாதுகாக்கப்பட்ட விலங்கு’’ என்று அறிவிக்க முடிவு செய்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து பசுக்களை புனிதமாக கருதி கொல்ல தடை இருப்பது போல ஒட்டகங்களையும் கொல்ல தடை விதிக்க ராஜஸ்தான் மாநில அரசு ஆலோசித்து வருகிறது. மேலும் ஒட்டகங்களை பாதுகாக்க தனி அமைச்சகம் உருவாக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
ராஜஸ்தானில் ஒட்டகங்கள் பற்றிய கணக்கெடுப்பு 5 ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2012–ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் ராஜஸ்தானில் 3½ லட்சம் ஒட்டகங்களே இருப்பதாக தெரிய வந்துள்ளது.
இந்த ஒட்டகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்தால், அது மாநில பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்று அம்மாநில அதிகாரிகள் கருதுகிறார்கள்.
No comments:
Post a Comment