Thursday, 3 July 2014

9 வயது மாணவனுக்கு ஆசிரியை எழுதிய காதல் கடிதம்


பிரான்ஸ் நாட்டில் ஆசிரியை ஒருவர் பள்ளியில் பயிலும் 9 வயது மாணவனுக்கு காதல் கடிதம் எழுதியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்சின் பாஸிலக் நகரில் உள்ல பள்ளி ஒன்றில் வேலை பார்க்கும் ஆசிரியை (30) ஒருவர், அதே பள்ளியில் பயின்று வரும் 9 வயது மாணவனுக்கு 23 காதல் கடிதங்களை எழுதியுள்ளார்.
குழந்தை போல் பிங் மற்றும் நீல நிறத்தில் இவர் எழுதிய காதல் கடிதங்களை, சிறுவனின் பெற்றோர் அவனின் அறையில் கண்டெடுத்துள்ளனர்.
அதில் ஆசிரியை தனது கடந்த கால வாழ்க்கையில் தான் சந்தித்து வந்த துன்பங்கள் பற்றியும், தற்போது சிறுவன் மீது கொண்டுள்ள காதலால் அவனுடன் ஓடி சென்று, 4 குழந்தைகளை பெற்றுக் கொள்ளவேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.
இதனையடுத்து சிறுவனின் பெற்றோர் பொலிசில் அளித்த புகாரின் பேரில், ஆசிரியை தனது குற்றத்தை ஒப்புகொண்டுள்ளார்.ஆனால் சிறுவன் ஏதும் பேசாமல் மெளனம் சாதித்துள்ளான்.
இந்நிலையில் ஆசிரியைக்கு மனநலம் குறைபாடு இருக்குமோ? என கருதிய பொலிசார் அவரை பரிசோதனைக்கும் அனுப்பியிருந்தனர்.ஆனால் அவர் நல்ல மனநலத்துடன் இருப்பதாக உறுதியானது.
இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் கூறுகையில், ஆசிரியர் மீது நாங்கள் வழக்குப்பதிவு செய்யாமல் கண்டித்து மட்டும் விட்டுள்ளோம் என்றும் தற்போது எங்கள் வீட்டை மாற்றி கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment