Tuesday, 1 July 2014

விரல் நுனியில் விபரீதம்; இந்தியாவில் அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்; ஆந்திரா, கர்நாடகா முதலிடம்


தகவல் தொழில்நுட்ப புரட்சியால் இன்று உலகமே உள்ளங்கையில் வந்துவிட்ட நிலையில், சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகிறது.

இணையம் வழியாக பல்வேறு குற்றங்கள் அரங்கேறுகின்றன. குறிப்பாக, கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் மூலம் இணையத்தில் பண பரிமாற்றங்கள் நடக்கும் பொழுது, பாஸ்வேர்டு மற்றும் கணக்கு விவரங்களை திருடுவது. சாட்டிங்கில் ஆரம்பித்து டேட்டிங்கில் முடியும் பாலியல் ரீதியான தொல்லைகள். பெண்களை ஆபாசமாக படம் பிடித்து அதனை இணையத்தில் வெளியிடுதல், மிரட்டுதல், தடை செய்யப்பட்ட பொருட்களை இணையத்தில் விற்பனை செய்வது, வெப்சைட் ஹேக்கிங், இமெயில் மிரட்டல், பேஸ்புக் மூலம் ஏற்படும் குற்றங்கள் போன்றவை அதிகரிக்க துவங்கியுள்ளது. 

இந்நிலையில், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் இதுவரை பதிவாகியுள்ள வழக்குகளின் அடிப்படையில் இந்தியாவில் 51 சதவீதம் அளவுக்கு சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

குறிப்பாக, ஐ.டி. கம்பெனிகள் அதிகம் உள்ள ஆந்திரா (பிரிக்காமல்), கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் அதிக அளவில் சைபர் குற்றங்கள் நிகழ்வதாக தெரியவந்துள்ளது.

நேஷனல் கிரைம் ரெக்கார்ட்ஸ் பீரோ அமைப்பு அளித்துள்ள தகவலின்படி, மகாராஷ்டிராவில் சென்ற ஆண்டை விட தற்போது 681 சைபர் கிரைம் வழக்குகள் அதிகமாக பதிவாகியுள்ளது. ஆந்திராவில் 635 வழக்குகளும், கர்நாடகாவில் 513 வழக்குகளும் அதிகமாக பதிவாகியுள்ளன. உத்தர பிரதேசத்தில் 372 வழக்குகள் சென்ற ஆண்டைவிட அதிகமாக பதிவாகியுள்ளது. 

ஆனால், குஜராத், ஒடிசா மாநிலங்களில் மிகக் குறைந்த அளவில் 60 வழக்குகளே பதிவாகியுள்ளன. தமிழ்நாட்டில் 54 வழக்குகள் பதிவாகியுள்ளன.

ஆனால், வடகிழக்கு மாநிலங்களான மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் மாநிலங்களில் ஒரு வழக்கு கூட பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment