உத்தரப்பிரதேசத்தில் உள்ள காசியாபாத்தில் சிகரெட் தராத வாலிபரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காசியாபாத்தில் உள்ள சியானி கேட் பகுதியில் வசித்து வரும் 25 வயதான வாலிபரான நிர்மல் என்பவரிடம், போதை பழக்கத்திற்கு அடிமையான பிரதீப் மற்றும் ராகுல் என்ற இரு இளைஞர்கள் சிகரெட் கேட்டுள்ளனர். அப்போது அவரிடம் சிகரெட் இல்லாததால் அவர் தர இயலாது என தெரிவித்திருக்கிறார். நிர்மலின் பதிலால் கோபமடைந்த இருவரும் தங்களிடமிருந்த நாட்டுத் துப்பாக்கியை கொண்டு அந்த வாலிபரை சுட்டுக்கொன்றுள்ளதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
துப்பாக்கியால் சுட்டுவிட்டு இருவரும் அங்கிருந்து தப்பி ஓடியவுடன், நிர்மல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதத்து விட்டு ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்
No comments:
Post a Comment