சிவகங்கை:பதவி நிலைக்க வேண்டி, கல்வி அமைச்சர் வைகை செல்வன் நேற்று, கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயிலில், சிறப்பு யாகம் நடத்தினார்.
கல்வி அமைச்சர் வைகைசெல்வனுக்கு, கடந்த சில நாட்களாக பதவி ஆட்டம் காணும் அளவில் சில சம்பவங்கள் நடக்கின்றன. குறிப்பாக, சென்னையில் பத்து மற்றும் பிளஸ் 2 தேர்வில் முதல் மூவிடங்களை பெற்ற மாணவர்களுக்கு, பரிசு வழங்கும் விழாவில்,பெற்றோர்களை நீண்ட நேரம் காக்க வைத்தார் என, அதிருப்தி அடைந்த பெற்றோர்கள், கல்வித்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிலர் பரிசுகளை வாங்காமல் திரும்பினர். மேலும், இளைஞர், இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளரான அமைச்சர் வைகை செல்வன், சுற்றுப் பயணத்தின்போது, நிர்வாகிகளை உடன் அழைத்து செல்ல தவறியதாகவும் அவர் மீது புகார் எழுந்தது. இந்த விவரங்கள், முதல்வர் ஜெ., வின் கவனத்திற்கு சென்றது. ஒவ்வொரு நிகழ்வும் சொதப்பலாக செய்வதால் அவர் மீது முதல்வர் அதிப்தியில் உள்ளதாக கட்சியினர் மத்தியில் பேச்சு அடிபடுகிறது.
சிறப்பு யாகம்: இந்நிலையில், தமக்கு, அமைச்சர் பதவி பறிபோகுமோ என்ற அச்சத்தில் உள்ளார். பதவி நிலைத்திருக்க வேண்டி, அவர் நேற்று கொல்லங்குடி வெட்டுடையார் காளிகோவிலில் சிறப்பு யாகம் நடத்தினார். கட்சி நிர்வாகிகள் சிலரும் பங்கேற்றனர். இதே போன்ற ஏற்கனவே அ.தி.மு.க.,வை சேர்ந்த அமைச்சர், எம்.எல்.ஏ., கட்சி நிர்வாகிகள் தங்களது பதவி நிலைக்க, சிவகங்கை மாவட்டம், கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம், யாகம் நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
கோவில் நிர்வாகி ஒருவர் கூறுகையில்,"" மழை வேண்டி கோவிலகளில் யாகம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கொல்லங்குடி கோவிலில் யாகம் நடந்தது. இதில், அறநிலையத்துறை அதிகாரிகள் மட்டுமே பங்கேற்க வேண்டும். ஆனால் கல்வி அமைச்சர் வைகை செல்வன் பங்கேற்றார். அப்போது, பதவி நிலைக்க வேண்டியும் அவருக்கு சிறப்பு யாகம் நடந்தது, '' என்றார்
No comments:
Post a Comment