Thursday, 23 May 2013

13 வயதுக்குட்பட்டவர்கள் 'பேஸ் புக்'கில் இணைவதை மத்திய அரசு தடை செய்ய வேண்டும்: டெல்லி ஐகோர்ட்

13 வயதுக்குட்பட்டவர்கள் 'பேஸ் புக்'கில் இணைவதை மத்திய அரசு தடை செய்ய வேண்டும்: டெல்லி ஐகோர்ட் உத்தரவு
13 வயதுக்குட்பட்டவர்கள் 'பேஸ் புக்' கணக்கு தொடங்குவதை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

18 வயதுக்குட்பட்ட மைனர்கள் பேஸ் புக் போன்ற தளங்களில் கணக்கு தொடங்குவது இந்திய மெஜாரட்டி சட்டம், இந்திய ஒப்பந்த சட்டம், தகவல் மற்றும் தொழில் நுட்ப சட்டத்தை மீறுவதாக உள்ளது. 

எனவே 18 வயதுக்குட்பட்டவர்கள் பேஸ் புக் போன்ற தளங்களில் கணக்கு தொடங்குவதை தடை செய்ய வேண்டும் என பா.ஜ.க. மூத்த தலைவர் கே.என்.கோவிந்தாச்சாரியா டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.டி.அஹமத் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- 

'நமது பிள்ளைகளை நாம் காப்பாற்ற வேண்டும். சட்டபுறம்பான 'ஆன் லைன்' செயல்பாடுகளில் பெரியவர்கள், அப்பாவி சிறுவர்கள் ஈர்த்து வருகின்றனர். 

அமெரிக்கா போன்ற நாடுகளில் இதுபோன்ற தளங்களில் கணக்கு தொடங்குவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு 13 என குறிப்பிடப்பட்டுள்ளது. 

சமூக நிலைமைகளை கருத்தில் கொண்டு, இந்தியாவிலும் 13 வயதுக்குட்பட்டவர்கள் இதுபோன்ற தளங்களில் கணக்கு தொடங்குவதை மத்திய அரசு தடை செய்ய வேண்டும். 

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment