Wednesday, 11 June 2014

ஒவ்வொரு வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்க முடியாது-உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல்


மும்பை: பாலியல் பாலத்கார சம்பவங்களை தடுப்பதற்காக, ஒவ்வொரு வீட்டுக்கும், தனித்தனியாக போலீஸ் பாதுகாப்பு அளிக்க முடியாது,'' என, மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் கூறியுள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநில சட்ட மேலவையில், மாநில உள்துறை அமைச்சரும், தேசியவாத காங்., மூத்த தலைவருமான ஆர்.ஆர்.பாட்டீல், நேற்று பேசியதாவது: பெண்களுக்கு எதிரான பாலியல் பாலத்காரம், வன்முறைகளை தவிர்க்க வேடும் என, அனைத்ண்து தரப்பினரும் வலியுறுத்துகின்றனர். பெரும்பாலான பலாத்கார சம்பவங்கள், வீடுகளுக்குள் தான் நடக்கின்றன. இதற்காக, ஒவ்வொரு வீட்டுக்கும், தனித் தனியாக போலீஸ் பாதுகாப்பு அளிக்க முடியாது. 40 சதவீத பலாத்கார சம்பவங்களில், பலாத்காரத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பது, பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரியும். இவ்வாறு, அவர் பேசினார். பாட்டீலின் இந்த பேச்சுக்கு, மகாராஷ்டிராவில், கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது

No comments:

Post a Comment