Sunday, 13 October 2013

மாணவியிடம் சில்மிஷம்; டியூஷன் ஆசிரியர்கள் 2 பேர் கைது



திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா ஆர்.கே.பேட்டை அடுத்த சோளிங்கர் வெங்கம்பட்டு காலனியை சேர்ந்தவர்கள் பிரபாகரன்(வயது 28) மற்றும் செல்வம்(28). இவர்கள் இருவரும் ஆர்.கே.பேட்டையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு டியூஷன் சென்டர் நடத்தி வருகின்றனர். இவர்களிடம் 10-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி மீது டியூஷன் ஆசிரியர் செல்வத்துக்கு ஒரு தலைக்காதல் ஏற்பட்டது. தன்னை காதலிக்கும்படி அந்த மாணவியை அவர் வற்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
சம்பவத்தன்று தாத்தா வீட்டில் தனியாக இருந்த அந்த மாணவியிடம் டியூஷன் ஆசிரியர்கள் செல்வம், பிரபாகரன் இருவரும் காதல் வசனம் பேசி சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சலிட்டார்.
சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் செல்வம், பிரபாகரன் இருவரையும் கையும் களவுமாக பிடித்து ஆர்.கே.பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தன

No comments:

Post a Comment