Monday, 14 October 2013

பெண்ணாக பிறந்ததால் மதுவை ஊற்றி கொன்ற தந்தை




ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஷேக் இஸ்மாயில். மெக்கானிக்காக வேலை செய்து வந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் இவருக்கு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு அவரது மனைவி கருவுற்றிருந்த போது, 'எனக்கொரு மகன் பிறப்பான். அவன் என்னைப் போலவே இருப்பான்' என்று இன்ப கனவில் மிதந்த அவருக்கு முதல் குழந்தை பெண்ணாக பிறந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டது.

அடுத்தது ஆண் குழந்தை தான் என்று உறவினர்கள் உசுப்பேற்றி விட்டதால், சில மாதங்களில் அவரது மனைவி மீண்டும் கருவுற்றார். இரண்டாவது குழந்தையும் பெண்ணாக போனதால், ஆண் குழந்தையை பெற்றே தீர வேண்டும என்ற முனைப்பில் தனது மனைவியை மூன்றாவது குழந்தைக்கும் தாயாக்கினார்.

மூன்றாவது பிரசவத்திலும் அவரது எண்ணம் ஈடேறாததால் சோகத்தில் மூழ்கிப்போன ஷேக் இஸ்மாயிலை குடிப்பழக்கம் தொற்றிக் கொண்டது.

நேற்று காலை நிதானம் தெரியாத போதையில் வீட்டுக்கு வந்த அவர் தனது பாக்கெட்டில் இருந்த மது பாட்டிலை திறந்து 3வது மகளான 18 மாத குழந்தையின் வாயில் வற்புறத்தி ஊற்றினார்.

தொண்டை மற்றும் குடல் எரிச்சலில் வீறிட்டு அழுத குழந்தை சிறிது நேரத்திற்குள் மயங்கி விழுந்தது, நிலமை விபரீதமானதை உணர்ந்த அவர் குழந்தையை குண்டூர் அரசு ஆஸ்பத்திரி வாசலில் போட்டுவிட்டு தப்பி தலைமறைவாகி விட்டார்.

உயிருக்கு போராடிய குழந்தையை தூக்கிச் சென்ற ஆஸ்பத்திரி ஊழியர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் குழந்தை நேற்றிரவு இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தலைமறைவாக உள்ள ஷேக் இஸ்மாயிலை பிடிக்க போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment