Monday, 28 October 2013

கார் ஓட்டிய பெண்களுக்கு அபராதம்-சவுதி



ரியாத்:சவுதி அரேபியாவின் சாலைகளில் பெண்கள் கார்களையோ அல்லது இருசக்கர வாகனங்களையோ ஓட்டிச் செல்ல கூடாது என அந்நாட்டு மதவாதிகள் தடை விதித்துள்ளனர்.இந்நிலையில், இந்த தடையை மீறும் விதமாக நேற்று கடை மற்றும் அலுவலங்களுக்கு 60 பெண்கள் கார்களை ஓட்டிச் சென்றனர்.வெளிநாட்டில் எடுக்கப்பட்ட ஓட்டுனர் உரிமங்களை வைத்துள்ள இவர்களில் பெரும்பாலான பெண்கள் மதவாதிகளின் கண்களில் மண்ணை தூவிவிட்டு தங்களது பெண்ணுரிமையை நிலைநாட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தலைநகர் ரியாத்தில் கார் ஓட்டிச் சென்ற 6 பெண்களையும், நாட்டின் இதர பகுதிகளில் கார் ஓட்டிய மேலும் 10 பெண்களையும் கைது செய்த போலீசார் அவர்களுக்கு தலா 300 ரியால் ரூபாயில் சுமார் 5 ஆயிரம் அபராதம் விதித்தனர். உலகிலேயே பெண்கள் கார் ஓட்டக்கூடாது என தடை விதித்துள்ள ஒரே நாடு சவுதி அரேபியா தான் என்பது இங்கே குறிப்பிடுதல் அவசியம்.

No comments:

Post a Comment