Tuesday, 29 October 2013

பள்ளியறையை 'பார்லராக ' மாற்றினார் ; அரசு பள்ளி ஆசிரியை


மும்பை: அரசு பள்ளியில் தனது காலை பிடித்து மசாஜ் செய்ய சொல்லிய ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது தொடர்பான காட்சியை சக மாணவன் தனது மொபைலில் வீடியோ எடுத்துள்ளான். இந்த சம்பவத்தினால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிய பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மகாராஷ்ட்டிரா மாநிலம் அகோலாவில் அரசு பள்ளி வழக்கம் போல் நடந்து வந்தது. இங்கு பணியாற்றுபவர் ஷீத்தல் அவுச்சர் . இவர் மாடலிங்காகவே பள்ளிக்கு வருவது வழக்கம் . பள்ளியில் சற்று களைப்பு ஏற்படும் போது மாணவ, மாணவர்களை அழைத்து தனக்கு கை, மற்றும் கால்களை பிடித்து சொல்வாராம்.

இது போல் ஒரு மாணவன் ஆசிரியை கொடுத்த தைலம் மூலம் அவரது காலை பிடித்து அழுத்தி தடவி விட்டார். இந்நேரத்தில் சக மாணவன் தனது மொபைல் மூலம் ஆசிரியருக்கு தெரியாமல் வீடியோ எடுத்துள்ளான். இந்த வீடியோ பள்ளி மேலாண் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இதனையடுத்து ஆசிரியை ஷீத்தல் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.


பெருமை கொள்கிறார் தாயார் : இது குறித்து இந்த பள்ளி மாணவன் சிங் கூறுகையில்; இந்த டீச்சர் வந்தால் எங்கள் மீது எவ்வித அக்கறையும் எடுத்து கொள்ள மாட்டார், பாடங்களே ஒழுங்காக நடத்த மாட்டார். அடிக்கடி மேஜையில் தலை வைத்து தூங்கி விடுவார் என்றார். இந்த காட்சியை படம் எடுத்த மாணவனின் தாயார் கூறுகையில், எனது மகன் மூலம் இந்த சம்பவம் வெளி உலகிற்கு தெரிந்ததில் நான் பெருமை படுகிறேன். எதிர் காலத்தில் பல மாணவர்கள் இது போல் சிரமபப்படாமல் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்றார்.

No comments:

Post a Comment