அனைத்து நாடுகளிலுமே பெண்களுக்கு போதிய பாதுகாப்பற்ற நிலை உள்ளது. பிரான்சிலும் இந்த நிலை உள்ளது.
ஆனால் பிரான்சை விட இந்தியாவில் உள்ள பெண்கள் போதிய பாதுகாப்புடன் உள்ளனர் என பிரான்ஸ் அமைச்சர் நஜாத் வல்லாட் பெக்காம் பேசினார்.
பிரான்ஸ் நாட்டின் பெண்கள் நலத் துறை அமைச்சர் நஜாத் வல்லாட் பெக்காம், நான்கு நாள் பயணமாக இந்தியா சென்றுள்ளார். அவர் பயணத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
இந்தியாவுக்கும் பிரான்சுக்கும் இடையே பல விஷயங்களில் தொடர்பு உள்ளது.
பெண்கள் நலனுக்காக பாடுபடும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இரு நாடுகளிலும் அதிகமாக உள்ளன. இவை ஒன்றுடன் ஒன்று, தொடர்புடையதாக உள்ளன.
டெல்லியில் கடந்தாண்டு மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து பத்திரிகைகளில் விரிவான செய்திகள் வெளியாகி இருந்தன. பிரான்சு பத்திரிகைகளும் இந்த செய்தியை பெரிய அளவில் வெளியிட்டிருந்தன.
இந்தியாவில் மட்டுமல்ல பிரான்சிலும் உலகின் மற்ற நாடுகளிலும், பெண்களுக்கு எதிரான இதுபோன்ற கொடுமைகள் நடக்கத் தான் செய்கின்றன. பிரான்சில் ஒரு நாளைக்கு 200 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாக புகார்கள் வருகின்றன.
பிரான்சில் உள்ள பல பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக புகார் அளிக்க மறுக்கின்றனர். இந்தியாவிலும் இதுபோன்ற நிலை காணப்படுகிறது.
இந்தியாவில் பெண்களுக்கு என்னென்ன பிரச்னைகள் உள்ளனவோ அதே பிரச்னைகள் பிரான்சிலும் உள்ளன. இன்னும் கூற வேண்டுமானால் பிரான்சை விட இந்தியாவில் உள்ள பெண்கள் போதிய பாதுகாப்புடன் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment