வாஷிங்டன்: அமெரிக்காவில், கணித ஆசிரியரை சுட்டு கொன்று விட்டு, மாணவன் ஒருவன் தற்கொலை செய்து கொண்டான். அமெரிக்காவில், துப்பாக்கி சூடு சம்பவங்கள் சகஜமாகி விட்டன. நிவேடா மாகாணத்தில், உள்ள உயர்நிலை, பள்ளியில், ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன், விளையாட்டு மைதானத்தில் நுழைந்து, அங்கு விளையாடி கொண்டிருந்த வகுப்பு தோழர்கள் மீது துப்பாக்கியால் சுட்டான். இதில், இரண்டு மாணவர்கள் காயமடைந்தனர். அங்கிருந்த கணக்கு ஆசிரியர், மைக்கேல் லேண்ட்ஸ்பெரி, 45, ஓடி வந்து, மாணவனை சமாதானப்படுத்தி, துப்பாக்கியை கீழே போடும் படி அறிவுறுத்தினார். ஆனால், அந்த மாணவன், ஆசிரியர் மைககேல் மீதும் சரமாரியாக சுட்டான். இதில் அவர் அங்கேயே உயிரிழந்தார்.
அங்கிருந்த மாணவர்கள் அனைவரும் அலறியடித்து கொண்டு ஓடி விட்டனர். சுற்று முற்றும் பார்த்த அந்த மாணவன், அதே துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு, தற்கொலை செய்து கொண்டான்.
எதற்காக மாணவர்களையும், ஆசிரியரையும் அந்த மாணவன் சுட்டான், என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
No comments:
Post a Comment