Friday, 18 October 2013

வெனிசுலாவில் அதிகரித்து வரும் கூந்தல் திருடர்கள்


மது நாட்டில் வசதிக்காகவும், சொகுசான வாழ்க்கைக்காகவும் திருடுகிறார்கள். பெரும்பாலும் தங்க நகைகள், பணம் போன்றவைதான் அவர்களின் இலக்கு. ஆனால் தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் பெண்களின் கூந்தலை திருடுகிறார்கள்.
வெனிசுலாவில் நீளமான கூந்தல் கொண்ட பெண்களுக்கு மதிப்பும், மரியாதையும் உண்டு. மேலும் நீளமான கூந்தல் கொண்டவர்கள்தான் அழகானவர்கள் என்று அங்குள்ள ஆண்கள் கருதுகிறார்கள். இதனால் கூந்தலை நீளமாக வளர்ப்பது அங்குள்ள பெண்களுக்கு பிடித்தமான விஷயம்.
அதுபோல நீளமாக வளர்க்க முடியாத பெண்கள் சவுரிமுடியை பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்துகிறார்கள். இதற்காக செயற்கையாக உருவாக்கப்பட்ட கூந்தல் அங்குள்ள கடைகளில் ரூ.2,500 முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதுவே இயற்கையான கூந்தல் என்றால் அதன் தரத்தை பொறுத்து ரூ.50 ஆயிரம் வரை விலை போகிறது.
இதனால் அங்குள்ள திருடர்கள் தனியாக செல்லும் பெண்களை பிடித்து அவர்களது கூந்தலில் ஒரு கிளிப்பை போட்டு மொத்த கூந்தலையும் கத்தரித்து எடுத்துச்சென்று விடுகிறார்கள். வெனிசுலாவில் தனியாக செல்லும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு என்பது கிடையாது. ஆனால் நீளமான தலைமுடியுடன் இருப்பதுதான் அவர்களுக்கு பிரச்சினையாக உள்ளது. ஆண்கள் மட்டுமின்றி அவர்களுடன் பெண்களும் கூட்டணி சேர்ந்து கூந்தலை திருடும் வேலையில் ஈடுபடுகிறார்கள்.
இந்த கூந்தல் திருட்டு தொடர்பாக ஏராளமான புகார்கள் அங்குள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனாலும் பலன் இல்லை. இதனால் தற்போது நீளமான கூந்தல் கொண்ட பெண்கள் தனியாக எங்கும் செல்வதில்லை. அப்படி சென்றாலும் உடன் ஒரு பட்டாளமே இருக்கும்.

No comments:

Post a Comment