Saturday, 19 October 2013

மாப்பிள்ளைத் தோழனுடன் உறவு வைத்துக் கொண்ட மணப்பெண்




மெல்போர்ன்: சீனாவில் ஒரு கூத்து நடந்துள்ளது. திருமணமானதும், மாப்பிள்ளையுடன் ரகசியமாக சந்திக்க விரும்பி அவர் தங்கியிருந்ததாக நினைத்து மாப்பிள்ளைத் தோழன் தங்கியிருந்த அறைக்குள் போய் அவருடன் உறவு வைத்துக் கொண்டுள்ளார் ஒரு பெண். இருட்டில் நடந்து விட்ட இந்த கூத்தால் தற்போது இரு வீட்டாரும் செம டென்ஷனாகியுள்ளனர். அந்தப் பெண்ணின் பெயரை ஹுவாங் என்று மட்டும் குறிப்பிட்டுள்ளனர். இவருக்கு சமீபத்தில் திருமணமானது. அன்று இரவு முதலிரவுக்கு முன்பே மாப்பிள்ளயை ரகசியமாக சந்திக்க விரும்பினார் மணப்பெண். இதையடுத்து மாப்பிள்ளையை அங்குள்ள ஒரு அறைக்கு வரச் சொன்னார். அவரும் வந்து காத்திருந்தார். ஆனால் அப்போது இருட்டாக இருந்தால் தான் சொன்ன அறைக்குப் பதில் மாப்பிள்ளைத் தோழனாக இருந்தவரின் அறைக்குள் போய் விட்டார் மணப்பெண். பின்னர் அங்கு படுக்கையில் படுத்திருந்த மாப்பிள்ளைத் தோழனை நெருங்கி உறவு கொண்டார். எல்லாம் முடிந்து எழுந்தபோதுதான் நடந்த தப்பு தெரிய வந்து இருவரும் அதிர்ந்தனர்... குவாங்ஸி என்ற மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்தது. இதையடுத்து பஞ்சாயத்துக் கூட்டப்பட்டது. அதில் மாப்பிள்ளைத் தோழன் ருயான், பெண்ணுக்கு 20,000 யுவான் அபராதம் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஆனால் அதைக் கட்ட மறுத்த ருயான், தப்பு என்னுடையதில்லை. இதில் பெண்ணுக்கும் சம பங்குண்டு. மேலும், அவ்வளவு பணம் என்னிடம் இல்லை என்றார். இதையடுத்து விவகாரம் போலீஸுக்குப் போனது. போலீஸார் வழக்குப் பதிவு செய்து கோர்ட்டுக்குக் கொண்டு போனார்கள். அங்கு விசாரணைக்குப் பின்னர் மாப்பிள்ளைத் தோழன் மீது எந்தத் தவறும் இல்லை, பெண் தவறாக வந்திருந்தாலும் கூட அவராகத்தான் செக்ஸுக்குத் தூண்டியுள்ளார். எனவே இதை பலாத்காரமாக கருத முடியாது என்று கூறி விட்டது
.

No comments:

Post a Comment