Monday, 14 October 2013

அபாயகரமான நிலையில் உள்ளது இந்தியாவில் பட்டினி கொடுமை



புதுடெல்லி: இந்தியாவில் பட்டினியால் வாடுவோர் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளபோதும், அதன் நிலைமை அபாயகரமான நிலையிலேயே உள்ளது.சர்வதேச உணவு கொள்கை ஆய்வு அமைப்பான வெல்தங்கர்லைப்பின் தலைவர் பார்பெல் டைக்மேன் கூறியதாவது:உலக அளவில் பட்டினியால் வாடுவோர் எண்ணிக்கை குறைந்து வந்தபோதும், தெற்கு ஆசியாவில் இந்த எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. இந்தியாவில் பட்டினியால் வாடுவோர் எண்ணிக்கையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், நிலைமை அபாயகரமான அளவிலேயே உள்ளது.1990ம் ஆண்டில் உலக அளவில் இருந்த எண்ணிக்கையை காட்டிலும், தற்போது பட்டினியால் வாடுவோர் எண்ணிக்கை 34 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால், தெற்கு ஆசியாவில் 20.7 சதவீதம் மட்டுமே குறைந்துள்ளது. புரூண்டி, எரித்திரியா, கமோராஸ் ஆகியவற்றில் பட்டினியால் வாடுவோர் எண்ணிக்கை மிக அதிகளவில் உள்ளது.

இந்தியாவில் சமீபத்தில் உணவு பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், 5 வயதுக்கு உட்பட்ட, சராசரி எடையை காட்டிலும் குறைந்த அளவிலான எடை கொண்ட குழந்தைகள் ஒவ்வொரு நகரிலும் அதிகளவில் உள்ளனர். 40 சதவீதம் குழந்தைகள் இதுபோன்ற நிலையில் உள்ளனர். சமூகத்தில் சமத்துவம் இல்லாதது, குறைந்த அளவிலான ஊட்டச்சத்து, கல்வி, பெண்களுக்கான சமூக நிலை ஆகியவையே, தெற்கு ஆசியாவில் ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகளின் எண்ணிக்கைக்கு காரணமாக உள்ளன.இவ்வாறு பார்பெல் டைக்மேன் கூறினார்

No comments:

Post a Comment