தூத்துக்குடி: 'கல்லூரி முதல்வர் சுரேஷ், மாணவர்களை, 'டார்ச்சர்' செய்ததால், அவரை கொலை செய்தோம்' என, போலீஸ் விசாரணையில், இன்பேன்ட் ஜீசஸ் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் தெரிவித்துள்ளனர்
தூத்துக்குடி வல்லநாடு, 'இன்பேன்ட் ஜீசஸ் கல்லூரி' முதல்வர் சுரேஷ், அக்கல்லூரியில் படித்த மூன்று மாணவர்களால், நேற்று முன்தினம், வெட்டிக் கொல்லப்பட்டார். கொலை செய்த மாணவர்கள் பிச்சைகண்ணன், பிரபாகரன், டேனிஷ் ஆகியோரை கைது செய்து, போலீசார் விசாரித்தனர்.
மாணவர்களை, கல்லூரி முதல்வர், 'டார்ச்சர்' செய்தார். வகுப்புக்கு, ஐந்து நிமிடம் தாமதமாக வந்தாலும், 1,000 ரூபாய் அபராதம் விதித்தார். அபராதம் கட்டத் தவறினால், வகுப்பறையில் அனுமதிக்க மாட்டார். கஷ்டப்பட்ட குடும்பத்தில் பிறந்த எங்களால், அதிக அபராதம் கட்ட முடியவில்லை.
மாணவர்களின் சிறு தவறுகளுக்கு கூட, பெற்றோரை அழைத்து வர சொல்வார்; பெற்றோர் முன், மாணவர்களை தரக்குறைவாக திட்டுவார். பெற்றோரை தவிர உறவினர்களை அழைத்து வந்தால், ஏற்றுக் கொள்ள மாட்டார். மாணவியரை கிண்டல் செய்த மாணவர்களை, முதல்வர் சுரேஷ் தண்டிக்கவில்லை; அதில், சம்பந்தமே இல்லாத பிச்சைக்கண்ணன் தண்டிக்கப்பட்டான். இதுகுறித்து நாங்கள், முதல்வரை சந்தித்து விளக்கினோம்; அதை, அவர் ஏற்க வில்லை.
'சஸ்பெண்ட்' தண்டனையை திரும்பப் பெற மறுத்து விட்டார். பிச்சைகண்ணன் வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதால், ஆத்திரத்தில் முதல்வரை கொலை செய்தோம். இவ்வாறு மாணவர்கள் தெரிவித்துள்ளனர்
No comments:
Post a Comment