Friday, 18 October 2013

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சில் பதவி: சவுதி அரேபியா ஏற்க மறுப்பு



ரியாத்: ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், தற்காலிக உறுப்பினர் பதவியை ஏற்க, சவுதி அரேபியா மறுத்து விட்டது. ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், மொத்தமுள்ள, 15 இடங்களில், அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சீனா, பிரிட்டன் ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாகவும், மீதமுள்ள, 10 இடங்களில், மற்ற நாடுகள், சுழற்சி முறையில், தற்காலிக உறுப்பினராக, இரண்டு ஆண்டுகள் அங்கம் வகித்து வருகின்றன. இந்த ஆண்டு, சிலி, சாத், லிதுவேனியா, நைஜீரியா, சவுதி அரேபியா ஆகிய நாடுகள் தற்காலிக உறுப்பினராவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.சவுதி அரேபியாவுக்கு முதன் முறையாக, ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில், உறுப்பினராவதற்கு, தற்போது வாய்ப்பு தரப்பட்டது. ஆனால், பல விஷயங்களில், பாதுகாப்பு கவுன்சில் இரட்டை தன்மையை கடைபிடிப்பதால், இந்த கவுன்சிலில் உறுப்பு நாடாவதற்கு, சவுதி மறுப்பு தெரிவித்துள்ளது. "சிரியா நாட்டில், சொந்த மக்களையே, அந்நாட்டு அரசு கொன்று குவித்து வருகிறது. இஸ்ரேல் பாலஸ்தீன சண்டை, 65 ஆண்டுகளாக நீடிக்கிறது. இன்னும் மத்திய கிழக்கு நாடுகளில் பதட்ட நிலை காணப்படுகிறது. இந்த விஷயங்களில், ஐ.நா.,வால், அமைதியை ஏற்படுத்த முடியவில்லை. எனவே, இந்த கவுன்சிலில், அங்கம் வகிப்பதை விரும்பவில்லை' என, சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ள

No comments:

Post a Comment