Wednesday, 30 October 2013

விபசாரத்தில் ஈடுபட வற்புறுத்தல்: கல்லூரி மீது நர்சிங் மாணவியர் புகார்

உஜ்ஜயினி: மத்திய பிரதேசத்தில், தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், நர்சிங் படித்து வரும், 14 மாணவியர், மருத்துவமனை நிர்வாகிகள் மற்றும் வார்டன், தங்களை, விபசாரத்தில் ஈடுபடுமாறு வற்புறுத்தியதாக தெரிவித்ததை அடுத்து பரபரப்பு ஏற்பட்டது.

உஜ்ஜயினி நகரில் செயல்படும், தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், நர்சுகளாக பயிற்சி பெற்று வரும், 14 மாணவியர் நேற்று முன்தினம் இரவில், போலீசில் புகார் அளித்தனர். அதில், விபசாரத்தில் ஈடுபட்டால், பணம் கிடைக்கும் என கூறி, விபசாரத்தில் ஈடுபட, கல்லூரி நிர்வாகம் வற்புறுத்தியதாக கூறினர். மேலும், கல்லூரி நிர்வாகிகள் சிலர், தங்களை பலாத்காரம் செய்ய முயன்றதாகவும் அவர்கள் கூறினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக, அந்தக் கல்லூரி வார்டன் கைது செய்யப்பட்டார். மாநில மகளிர் உரிமை அமைப்பின் நிர்வாகிகள், நேற்று அந்த கல்லூரிக்குச் சென்று விசாரணை நடத்தினர். புகார் கொடுத்த மாணவியரிடம், நடந்த சம்பவங்களை அவர்கள் கேட்டறிந்தனர். கல்லூரி நிர்வாகத்திடம் கேட்ட போது, 'இரவுப் பணிக்கு செல்ல வலியுறுத்தினோம்; விபசாரத்தில் ஈடுபட வலியுறுத்தவில்லை. இரவுப் பணிக்கு செல்ல மறுத்துள்ள அவர்கள், எங்கள் மீது வீண் பழி சுமத்துகின்றனர்' என, தெரிவித்தனர்.

No comments:

Post a Comment