துருக்கி: துருக்கியில், முதன் முறையாக, இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள, 'செக்ஸ்' குறித்த விவரங்களை தெரிவிக்கும், புதிய இணையதளம் ஒன்று துவங்கப்பட்டுள்ளது.
துருக்கி நாட்டைச் சேர்ந்த, ஹவுல்க் முரால் டெமிரேல், 38; புதிய 'ஆன் - லைன் செக்ஸ் ஷாப்' ஒன்றை துவங்கியுள்ளார் உடலுறவுக்கு தேவைப்படும் வாசனை திரவியங்கள், அழகு சாதனப் பொருட்கள் போன்ற முக்கிய பொருட்கள் அனைத்தும், ஆன் - லைனில் விற்பனை செய்யும் இவர், இஸ்லாத்தில் எவ்வகை செக்ஸ் முறைக்கு அனுமதி உள்ளது, எந்த முறையில் செக்ஸ் செய்யக் கூடாது போன்ற ஆலோசனைகளையும் வழங்குகிறார். இந்த புதிய முறைக்கு, 'ஹலால் செக்ஸ்' எனவும் கூறியுள்ளார். இந்த புதிய முறைக்கு, துருக்கியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த இணையதளத்தை, ஒரே நாளில், 33 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்.
இது குறித்து, ஹவுல்க் முரால் டெமிரேல் கூறியதாவது: செக்ஸ் பற்றி அறிந்து கொள்ளவும், அது பற்றி ஆலோசனை பெறவும், ஏராளமான இணையதளங்கள் உள்ளன. ஆனால், பெரும்பாலான இணையதளங்களில், ஆபாச படங்கள் இடம் பெற்றுள்ளன.
இதனால், முஸ்லிம்கள் இதை பார்க்க தயக்கம் காட்டுகின்றனர். செக்ஸ் பற்றி அறிய விரும்பும் பலரும் இவ்வகை இணையதளங்களை பார்ப்பதால் மன சங்கடத்திற்கு ஆளாகின்றனர். எனவே, ஆபாச படங்கள் இடம் பெறாத, செக்ஸ் பற்றி தகவல்கள் தர வேண்டும் என, திட்டமிட்டேன். அதிலும், இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள மற்றும் அனுமதிக்கப்படாத விஷயங்களை, அனைத்து முஸ்லிம்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் எனவும் எண்ணினேன். அதனால், www.bayan.helalsexshop.com என்ற இணையதளத்தை துவங்கி, செக்ஸ் பற்றிய ஆலோசனை மற்றும் அதற்கு தேவையான பொருட்களையும் ஆன் - லைனில் விற்பனை செய்து வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment