இந்தியாவில் வாழும் 60 வயதுக்கு மேற்பட்ட நபர்களில் 20 சதவீதம் பேர் மனம் சார்ந்த நோய்களில் சிக்கி அவதிப்படுவதாக தெரிய வந்துள்ளது.
உ.பி.யில் உள்ள சத்ரபதி சாஹீஜி மருத்துவ பல்கலைக்கழகம், புதுவையில் உள்ள ஜிப்மர் மருத்துவ பல்கலைக்கழகம் ஆகியவை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் ஆதரவுடன் நடத்திய ஆய்வில் இவ்விபரம் தெரிய வந்துள்ளது.
உலக மனநல தினமான கடந்த 10-ம் தேதி வெளியிடப்பட்ட இந்த ஆய்வறிக்கையின் முடிவின்படி, நகர் பகுதிகளில் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட இந்தியர்களில் 17.3 சதவீதம் பேரும், கிராமப்புறங்களில் வாழ்பவர்களில் 23.6 பேரும் என சராசரியாக 20 சதவீதம் ஏதாவது ஒருவகை மனநலம் சார்ந்த பிரச்சனையினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிகிறது.
1947 வரை 32 வயதாக இருந்த சராசரி இந்தியரின் ஆயுட்காலம் 2011ல் 63.4 ஆக உயர்ந்தது. 60 வயதுக்கு மேற்பட்ட முதியோரின் எண்ணிக்கை 7.1 ஆக தற்போது உள்ளது.
2050-ம் ஆண்டுக்குள் இந்திய மக்கள் தொகையில் ஒட்டுமொத்தமாக 55 சதவீத வளர்ச்சி ஏற்படும்.
அப்போது 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 326 சதவீதமும் 80 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 700 சதவீதமாகவும் உயரும.
தற்போதைய நிலவரப்படி 1.71 கோடி பேர் மனநோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கையில் ஏற்படக்கூடிய மாற்றத்திற்கு தக்கவாறு 7.2 லட்சம் உள்நோயாளிகளை கையாளும் வசதியும், 7 ஆயிரத்து 200 மனநல நிபுணர்களும், இதே எண்ணிக்கையிலான மனநல சமூக நல பணியாளர்களும் 14 ஆயிரத்து 400 மருத்துவ அதிகாரிகளும் 72 ஆயிரம் செவிலியர்களும், 1 லட்சத்து 44 ஆயிரம் உதவியாளர்களும் தேவைப்படுவார்கள் என அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.
No comments:
Post a Comment