Saturday, 19 October 2013

இரட்டை குழந்தைளை கொன்று, கழிப்பறையில் மறைத்து வைத்த கணவன், மனைவியை,


கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், கோலாகலமேட்டை சேர்ந்தவர் விஜிஷா, 25, தனியார் மருத்துவமனை நர்ஸ். இவரும், பிரவீன், 28, என்பவரும் காதலித்தனர். காதல் எல்லை மீறி போனதில், விஜிஷா கர்ப்பம் அடைந்தார். அதை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. இந்நிலையில், விஜிஷா - பிரவீனுக்கு சமீபத்தில், திருமணம் நடந்தது. மத்திய அமைச்சர் சசி தரூர், தன் மனைவியுடன், இந்தத் திருமணத்தில் பங்கேற்றார். திருமணமான சில நாட்களில், விஜிஷாவுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது. குழந்தைகளை விரும்பாத இருவரும், அவற்றை கொன்று, உடல்களை துணியில் சுற்றி, கழிப்பறையில் பதுக்கி வைத்தனர். பிரசவத்தால், விஜிஷாவுக்கு அதிகளவில் ரத்த போக்கு இருந்ததால், கோட்டயம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது, விஜிஷாவை பரிசோதித்த டாக்டர்கள், அவர் குழந்தை பெற்றுள்ளதை அறிந்து விவரம் கேட்டனர்; அவரோ உண்மையை சொல்ல மறுத்தார். 'பொய் சொன்னால் போலீசில் ஒப்படைப்போம்' என, டாக்டர்கள் கூறியதால், நடந்த சம்பவத்தை கூறினார். அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள், சம்பவம் குறித்து, கோட்டயம் காந்தி நகர் போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து, விஜிஷா, பிரவீன் மற்றும் அவரின் தந்தை குஞ்சுமோன், 52, ஆகியோர் மீது, வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment