Friday, 18 October 2013

உறவுக்கு மறுப்பு: மனைவியை கொன்று கணவர் தற்கொலை



இடைப்பாடி: தாம்பத்ய உறவுக்கு இணங்க மறுத்த மனைவியை கொன்று, கணவர் தற்கொலை செய்து கொண்டார். சேலம் மாவட்டம், பாச்சாலீயூர் பகுதியை சேர்ந்தவர், மாரிமுத்து, 50. மாட்டு வியாபாரியான இவருக்கு, பழனியம்மாள், 45, என்ற மனைவியும், இரு மகன், ஒரு மகள் உள்ளார். மகளுக்கு திருமணமாகி விட்டது. மகன்கள் இருவரும், வீட்டிலேயே விசைத்தறி தொழில் செய்து வருகின்றனர்.
மாரிமுத்து, அவரது மனைவிக்கு, மூன்று ஆண்டுகளாக உள்ள தகராறு காரணமாக , இருவரும், ஒரே வீட்டில் இருந்தும், பேசிக் கொள்வதில்லை. இதற்கு, முறையான தாம்பத்ய உறவு இல்லாததே காரணம் என, கூறப்படுகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு, வீட்டின் முன்புறம் கட்டிலில், தனியாக தூங்கிக் கொண்டிருந்த பழனியம்மாளின் கழுத்தை, மாரிமுத்து அரிவாளால் அறுத்து கொலை செய்தார். பின், வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருத்தை குடித்து, அவரும் தற்கொலை செய்து கொண்டார். இருவரது உடலை கைப்பற்றி, போலீசார் விசாரிக்கின்றனர்.

No comments:

Post a Comment