Tuesday, 29 October 2013

மின்சாரம் பாய்ச்சி மனைவியைகொன்ற கொடூர கணவன்



மங்கலம்பேட்டை: மின்சாரத்தை பாய்ச்சி மனைவியைக் கொன்ற கணவரை, போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் அடுத்த, கோணாங்குப்பத்தைச் சேர்ந்தவர், அண்ணாதுரை, 28. இவரது மனைவி சரண்யா, 21. மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணமான, இவர்களுக்கு குழந்தை இல்லை. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், வெளிநாடு சென்ற அண்ணா துரை, கடந்த மாதம் திரும்பி வந்தார். இம்மாதம், 16ம் தேதி, கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. கோபத்தில், தாய் வீட்டிற்குச் சென்றார் சரண்யா. அவரை சமாதானம் செய்து, கடந்த வாரம் வீட்டிற்கு அழைத்து வந்தார் அண்ணாதுரை. இந்நிலையில், சரண்யா நேற்று காலை வீட்டில் இறந்து கிடந்தார். போலீசார் நடத்திய விசாரணையில், தாமிர ஒயரால், அவரின் கழுத்தை இறுக்கி, மின்சாரத்தை பாய்ச்சி, கொலை செய்திருப்பது தெரியவந்தது. சரண்யா தாய் வாசுகி கொடுத்த புகாரில், போலீசார் வழக்குப் பதிந்து, அண்ணாதுரையை கைது செய்தனர்.

No comments:

Post a Comment