ஒரு தவறு நடந்ததற்குப் பின் அது குறித்து மனிதர்களும், எலிகளும் ஒரே மாதிரி சிந்திப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பிரௌன் மற்றும் யேல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் அடங்கிய குழு இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டது.
ஏதேனும் ஒரு செயல் தவறாக நடந்து விட்டால் அது குறித்து மனிதர்கள் சிந்திக்கும் விதமும், எலிகள் சிந்திக்கும் விதமும் ஒரே மாதிரியாக இருக்கிறது என அதில் தெரியவந்துள்ளது.
அத்தவறுகளுக்கு மாற்றாகத் தங்களைத் தகவமைத்துக் கொள்வது குறித்து மனிதர்களின் மூளைகளும், எலிகளின் மூளைகளும் ஒரே அலைவரிசையில் சிந்திக்கின்றன.
மோட்டார் கார்டெக்ஸ் எனப்படும் மூளையின் இயக்க மேற்பட்டைப் பகுதியில் இச் செயல்பாடுகள் நிகழ்கின்றன. இந்த ஆய்வில் மனிதர்களும், எலிகளும், தவறுகளுக்காகத் தகவமைக்கும் போது எப்படி மிக எளிதாக நேரத்தைக் கணக்கிட்டுச் செயல்படுகின்றனர் எனத் தெரிய வந்துள்ளது. மனிதர்களின் தகவமைப்புக் கட்டுப்பாட்டுத் திறன் குறித்து மேலும் அறிவதற்கு இந்த ஆய்வு உதவியாக இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வுகள் ஓசிடி, மன அழுத்தம், ஏடிஎச்டி, முடக்குவாதம் போன்ற மூளை சார்ந்த நோய்களுக்கு தீர்வு காண உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விஞ்ஞானிகள் குழுவில் இடம்பெற்றுள்ள லோவா பல்கலைக்கழக பேராசிரியர் நந்தகுமார் நாராயணன் இந்திய வம்சாவளி விஞ்ஞானி என்பது குறி்ப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment