சேலம், சி.எஸ்.ஐ., ஹோபார்ட் பள்ளி வளாகத்தில், மாணவியிடம், சில்மிஷத்தில் ஈடுபட்ட, மதபோதகர் ஜெயசீலனை, "சஸ்பெண்ட்' செய்து, சி.எஸ்.ஐ., கோவை மண்டல பிஷப் க்யூமோச்சி ரவீந்தர் உத்தரவிட்டார்.
சேலம், அஸ்தம்பட்டி, சக்திநகரை சேர்ந்தவர், மணிகண்டன்,35. இவரது, 13 வயது மகள், சி.எஸ்.ஐ., ஹோபார்ட் உயர்நிலைப்பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவியை, பள்ளி வளாகத்தில் வசித்து வரும், சேலம், சி.எஸ்.ஐ., இம்மானுவேல் தேவாலயத்தில், மதபோதகராக பணியாற்றி வரும், ஜெயசீலன் அழைத்துள்ளார். அங்கு சென்ற மாணவியிடம், ஜெயசீலன், சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து சிறுமி, பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பெற்றோர், 18ம் தேதி இரவு, அஸ்தம்பட்டி போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார், தலைமறைவான, மதபோதகர் ஜெயசீலனை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில்,மதபோதர் மீது, சி.எஸ்.ஐ., கோவை திருமண்டல பிஷப், க்யூமோச்சி ரவீந்தருக்கு புகார் சென்றதை அடுத்து, ஜெயசீலனை சஸ்பெண்ட் செய்து, உத்தரவிட்டுள்ளார்
No comments:
Post a Comment