செக்ஸ் உறவுக்கு மறுத்ததால் காதலனை கொடூரமாக கத்தியால் குத்தி கொலை செய்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடாவை சேர்ந்த பெண் லா கிறிஸ்டல் கிங் உல்பர்க்(வயது 28).
லண்டனில் வசிக்கும் இவர் தனது தோழியை அழைத்து கொண்டு நண்பர் வீட்டுக்கு போயிருந்தார், அங்கு அவர் தனியாக இருந்துள்ளார்.
இதனால் 3 பேரும் சேர்ந்து மதுக்குடித்துள்ளனர், போதையில் லா கிறிஸ்டல் தன் காதலனை வலுக்கட்டாயமாக செக்ஸ் உறவுக்கு அழைத்துள்ளார்.
அதற்கு உன் தோழி முன்பு உறவு வைத்துக் கொள்வது அநாகரீகமானது என கூறி காதலன் மறுத்துள்ளார்.
இதனால் இருவருக்கும் தகராறு ஏற்படவே, ஒரு கட்டத்தில் வாலிபர் லா கிறிஸ்டல் மூக்கில் குத்திவிட்டார்.
மேலும் கத்தியால் காதலியை தாக்க முயன்ற போது, கத்தியை பிடுங்கி லா கிறிஸ்டல் அவரது கண், தோள் பட்டை பகுதியில் சரமாரியாக குத்தினார்.
இதில் சம்பவ இடத்திலேயே அந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார், இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிசார் லா கிறிஸ்டலை கைது செய்தனர்
No comments:
Post a Comment