புனேயில், 5 ரூபாய் தகராறில் பள்ளிக்கூட வகுப்பறையில் மாணவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதையொட்டி மற்றொரு மாணவரை போலீசார் கைது செய்தனர் மராட்டிய மாநிலம், புனே பிம்ப்ரிகாவில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 11–வது வகுப்பு படித்த வந்தவர், ரிஷிகேஷ் பாலு சர்வடே (வயது 15). அவர் தன்னுடன் படிக்கும் மற்றொரு மாணவருக்கு 15 ரூபாய் கடன் கொடுத்து இருந்தார்.அதில் 10 ரூபாயை திருப்பிக் கொடுத்த அந்த மாணவர், மீதி 5 ரூபாயை மறுநாள் தருவதாக மாணவர் ரிஷிகேஷிடம் கூறி இருக்கிறார். அதன்படி நேற்று 5 ரூபாயை ரிஷிகேஷ் திருப்பிக் கேட்டு இருக்கிறார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மாணவர், நாற்காலி மற்றும் கட்டையால் சரமாரியாக ரிஷிகேஷை தாக்கினார். இதனால் தலையில் படுகாயம் அடைந்த ரத்தம் பீறிட்ட ரிஷிகேஷ் உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், வழியிலேயே அவருடைய உயிர் பிரிந்து விட்டது
No comments:
Post a Comment