Saturday, 19 October 2013

மகன் கவனிக்காததால் பெற்றோர் தற்கொலை



திருவாரூர்: மகன் கவனிக்காததால், விரக்தியடைந்த பெற்றோர், தற்கொலை செய்து கொண்டனர். திருவாரூர் அருகே, இலவங்கார் கிராமத்தை சேர்ந்தவர் தியாகராஜன்(65), கொத்தனார். இவரது மனைவி மல்லிகா (60). இவர்களின் மகளுக்கு, சில ஆண்டுகளுக்கு முன், திருமணம் நடந்தது. மகன் சேகருக்கு, கடந்த மாதம், 15ம் தேதி திருமணம் முடித்தனர். தியாகராஜன், தன் பெயரில் இருந்த சொத்துக்களை, மகன் பெயருக்கு எழுதி வைத்தார். கடந்த சில தினங்களாக, பெற்றோரை, சேகர் கவனிக்காததால் பிரச்னை ஏற்பட்டது. இதனால், தியாகராஜன், மல்லிகா நேற்று விஷம் குடித்து, வீட்டில் தற்கொலை செய்து கொண்டனர். தகவலறிந்த தாலுகா போலீசார், விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment