Tuesday, 22 October 2013

இஸ்லாமிய சட்டங்களை பின்பற்ற புருனே அரசு முடிவு



புருனே நாட்டில், இஸ்லாமிய சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு உள்ளன.
சீனாவுக்கும், மலேசியாவுக்கும் இடையே, போர்னியோ தீவில் அமைந்துள்ள நாடு புருனே. 1984ல், பிரிட்டிஷ் அரசிடமிருந்து விடுதலை பெற்றது. புருனேவில், 70 சதவீதம் பேர் முஸ்லிம்கள். தற்போது, இந்த 
நாட்டை சுல்தான் ஹசனல் போல்கியா,67, ஆட்சி செய்கிறார். எண்ணெய் வளம் மிக்க இந்த நாட்டில், பிரிட்டிஷ் ஆட்சிக்கு பிறகு, படிப்படியாக, இஸ்லாமிய சட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
கடந்த, 96ம் ஆண்டு முதல், இஸ்லாமிய சட்டங்கள் முழுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றன. தற்போது, இஸ்லாமிய சட்டங்கள் கடுமையாக்கப்படுவதாக, சுல்தான் ஹசனல் தெரிவித்துள்ளார். இதன் படி, கள்ளக்காதலில் ஈடுபடுவோருக்கு கல்லால் அடித்து கொல்லும் தண்டனை வழங்கப்படும்; திருட்டு குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கைகள் துண்டிக்கப்படும்;கருக்கலைப்பு மற்றும் மது அருந்துதல் ÷
பான்ற குற்றங்களுக்கு பிரம்படி தண்டனை வழங்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment