Sunday, 13 October 2013

மனைவியுடன் தொடர்பு வைத்திருந்ததை கண்டித்தா கணவன் கொலை



மதுரையில் கட்டிட கான்டிராக்டர் கொலையில், அவரது நண்பர் மற்றும் மைத்துனரை போலீசார் கைது செய்தனர். மனைவியுடன் தொடர்பு வைத்திருந்ததை கண்டித்ததால் கொலை செய்ததாக தெரியவந்துள்ளது.
நண்பர் கொலை
மதுரை முத்துப்பட்டியைச் சேர்ந்தவர் சந்தனம். கட்டிடத்தொழில் செய்து வந்தார். கடந்த 10–ந் தேதியில் இருந்த அவரை காணவில்லை என அவரது தாயார் சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் விசாரித்து வந்தனர். அப்போது அவர் தனது நண்பர் முருகனுடன் சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து முருகனின் செல்போனுக்கு போலீசார் தொடர்பு கொண்டனர். அப்போது அவர், சந்தனத்தை கொலை செய்து விட்டதாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் கொலை செய்யப்பட்ட சந்தனத்தின் உடலையும், அவரை கொலை செய்ததாக போனில் கூறிய முருகனையும் தேடி வந்தனர்.
2 பேர் கைது
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு முருகனை போலீசார் தேடி கண்டுபிடித்தனர். சந்தனம் உடல் இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பதற்காக போலீசார் அவரை அழைத்துச் சென்றனர். அப்போது முருகன் தெரிவித்த தகவல்படி சந்தனத்தை கொலை செய்து உடல் போடப்பட்ட நாகமலைபுதுக்கோட்டையை அடுத்த முத்துப்பட்டி பகுதிக்கு போலீசார் முருகனுடன் சென்றனர்.
அங்கு சந்தனத்தின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின் முருகனையும், கொலைக்கு உடந்தையாக இருந்ததாக அவரது மைத்துனர் முத்துக்குமாரையும் போலீசார் கைது செய்தனர்.
கண்டித்ததால் ஆத்திரம்
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:–
முருகனின் வீட்டிற்கு அடிக்கடி சந்தனம் அடிக்கடி செல்வது வழக்கம். அப்போது அவருக்கும், முருகனின் மனைவிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த முருகன் அவர்களை கண்டித்துள்ளார். ஆனாலும் அவர்கள் உறவு தொடர்ந்து. இதனால் அவரை கொலை செய்ய முடிவு செய்த முருகன், சம்பவத்தன்று மது அருந்தலாம் என சந்தனத்தை அழைத்துச் சென்றிருக்கிறார். முத்துப்பட்டி வயல்வெளியில் சந்தனம், முருகன், அவரது மைத்துனர் முத்துக்குமார் ஆகியோர் மது அருந்தி உள்ளர். அதன்பின் சந்தனத்தை மற்ற 2 பேரும் சேர்ந்து கொலை செய்து உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment