மேற்கு வங்காள மாநிலம் ஹூமாயுன் நகரை சேர்ந்த 16 வயது பெண் ஒருவர் கடைக்கு சென்றுவிட்டு தனது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் உள்ள ஒரு டீக்கடையில் சஞ்சய் தலுக்தர் என்ற ரவுடி இருந்தான்.
அவனுடன் நண்பர்கள் 6 பேரும் இருந்தனர். அந்த வழியாக வந்த பெண்ணை பார்த்த ரவுடி சஞ்சய், அவரை விபசாரத்துக்கு வரும்படி அழைத்தான்.
இதனால் பயந்த அப்பெண் அருகில் இருக்கும். டாக்சி டிரைவரான தனது தந்தையிடம் ஓடி தப்பி செல்ல முயன்றார். ஆனால் ரவுடி சஞ்சயும், அவனது நண்பர்கள் 6 பேரும் சேர்ந்து அவரை அருகில் இருந்த குடிசைக்கு கடத்தி சென்றனர்.
பின்னர் அங்கு வைத்து 7 பேரும் அவரை கற்பழித்தனர். நள்ளிரவில் அவர்களிடம் இருந்து தப்பிய அப்பெண் தள்ளாடியபடியே தனது வீட்டுக்கு வந்து சேர்ந்தார். நடந்தவற்றை தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதார்.
அதைத்தொடர்ந்து மறுநாள் காலை அருகே உள்ள மத்யம்கிரம் போலீசில் அப்ஙபெண் தனது பெற்றோருடன் சென்று புகார் கொடுக்க சென்றார். ஆனால் அவரது புகாரை போலீசார் ஏற்காமல் அலைக் கழித்தனர்.
2 நாட்களாகியும் போலீசார் அவரது புகாரை ஏற்காததால் மனம் உடைந்த அப்பெண் ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். அதை பார்த்த ரெயில் பயணிகள் அவரை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர்.
இதற்கிடையே அந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமையையும், போலீசார் நடவடிக்கை எடுக்காததையும் அறிந்த ஹுமாயுன்பூர் மக்கள் கொதித்தெழுந்தனர். நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து மாபெரும் போராட்டம் நடத்தினர். அதைத்தொடர்ந்து கற்பழிப்பு குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
No comments:
Post a Comment