Monday, 30 September 2013

குடிபோதையில் துன்புறுத்திய கணவனின் கழுத்தை அறுத்துக்கொன்ற இளம்பெண்



சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த தென்மாபட்டு கிராமத்தை சேர்ந்தவர், பாரிமன்னன் (வயது 35). இவர் மீது தங்கச்சங்கிலி பறிப்பு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
இவருடைய முதல் மனைவி மாரிமுத்து. இவர் பாரிமன்னனை விட்டு பிரிந்து சென்று விட்டார்.
இதையடுத்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பிரவீனா (21) என்ற பெண்ணை பாரிமன்னன் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் பாரிமன்னன் தொடர்ந்து குடித்து விட்டு வீட்டுக்கு வந்து, பிரவீனாவை துன்புறுத்தி வந்தார்.
கழுத்தை அறுத்து கொலை
சம்பவத்தன்று பாரிமன்னன் வழக்கம்போல் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து, பிரவீனாவுடன் சண்டை போட்டார். பிறகு தூங்கி விட்டார். அதிகாலையில் மீண்டும் எழுந்து பிரவீனாவுடன் தகராறு செய்தார். திடீரென்று வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து பிரவீனாவை வெட்டப் பாய்ந்தார்.
பிரவீனா அந்த அரிவாளைப் பிடுங்கி பாரிமன்னனை நோக்கி வெட்டினார். வெட்டு, பாரிமன்னனின் தொண்டைப்பகுதியில் விழுந்து கழுத்து அறுந்தது. அவர் அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் நகர் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பாரிமன்னனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பிரவீனா கைது செய்யப்பட்டார்

No comments:

Post a Comment