Tuesday, 12 November 2013

ஆசியாவில் 10ல் ஒரு ஆண் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்கின்றனர் - ஆய்வு

Click HereClick Here


மும்பை: ஆசியாவில் 10ல் ஒரு ஆண் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்கின்றனர் என ஐ.நா சபை மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. ஆசியாவை சேர்ந்த வங்காளதேசம், சீனா, கம்போடியா, இந்தோனேஷியா, பப்புவா நியூ கினியா, இலங்கை என 6 நாடுகள் இந்த ஆய்வில் பங்கேற்றனர். கடந்த ஜனவரி 2011-டிசம்பர் 2012 வரையில் சுமார் 10,178 ஆண்களிடம் ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளில் ஒன்பது இடங்களில் கேள்விகள் கேட்கப்பட்டன. ஆனால் அவற்றில், கற்பழிப்பு என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை.உங்களது மனைவி அல்லது பெண் நண்பர் செக்ஸ் விருப்பம் இல்லாவிட்டாலும் அவர்கள் ஏற்று கொள்வாஅதிக போதையில் அல்லது அதிகமாக குடித்திருக்கும்போது, ஒரு பெண் அல்லது சிறுமி, அவள் விரும்புகிறாளா அல்லது இல்லையா என்பதை தெரிவிக்க இயலாத நிலையில், நீங்கள் செக்சில் ஈடுபட்டதுண்டா? என மற்றொரு கேள்வி இருந்தது.இக்கேள்விகளுக்கு பதிலளித்தவர்களில், பப்புவா நியூ கினியாவை சேர்ந்த 10ல் 6 பேர் வலுக்கட்டாயமாக ஒரு பெண்ணை செக்சிற்கு உட்படுத்தியதாக தெரிவித்துள்ளனர் இது வங்காளதேசத்தின் நகர்ப்புறங்களில் மிக குறைந்த அளவாக 10ல் ஒருவருக்கும் கீழ் என்றும் இலங்கையில் 10ல் ஒருவருக்கு மேல் என்றும் உள்ளனஅதுவே, கம்போடியா, சீனா மற்றும் இந்தோனேஷியா நாடுகளில் 5ல் ஒருவர் என்ற அளவில் உள்ளதாக தெரிய வந்துள்ளது.ஆய்வில் 24 சதவீதத்தினர் நெருங்கிய உறவுகளை பலாத்காரமாக ஈடுபடுவதாகவும், இது வங்காளதேசத்தில் 13 சதவீதமாகவும் மற்றும் பப்புவா நியூ கினியாவில் 59 சதவீதமாகவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது நெருங்கிய உறவுகள் என கருதப்படும் மனைவி மற்றும் பெண் தோழியரை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டவர்களில் 4ல் ஒரு பங்கினர் தெரிவித்துள்ளனர்.


No comments:

Post a Comment