உலகளவில், குறிப்பாக, ஆசிய நாடுகளில், பெரும்பாலானோர், இரைப்பை புற்றுநோயால் இறக்கின்றனர். தைவானின், தேசிய ஐலன் பல்கலைக்கழக, கால்நடை அறிவியல் துறை விஞ்ஞானி, வை-ஜங்-சேன், இது குறித்து கூறியதாவது: பாலில் உள்ள, 'எல்.எப்.சின் பி 25' (லாக்டோபெரிசின் பிராக்மென்ட்) என்னும் 'பெப்டைடு' மனிதர்களின் வயிற்றில் ஏற்படும் புற்றுநோயை குணப்படுத்துகிறது. 'எல்.எப்.சின் பி25'யை, இரைப்பை கேன்சர் செல்லுக்கு அருகில் செலுத்திய ஒரு மணி நேரத்தில், புற்றுநோய் செல்லின் ஜவ்வுக்குள் நுழைவதையும், 24 மணி நேரத்திற்குள் கேன்சர் செல்லை சுருக்கி, சிறிதாக்கி, தன்னுடைய வேலையை முடித்து விடுவது, ஆய்வில் தெரிய வந்துள்ளது. 'பெக்லின்-1' என்னும் புரதத்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இந்தப் புரதம், புற்றுநோய் செல்களை அழிப்பதில், 'எல்.எப்.சின் பி25'யை விட அதிக ஆற்றலும், வேகமும் கொண்டது. எதிர்காலத்தில், பெக்லின்-1 மற்றும் 'எல்.எப்.சின் பி25'ம், புதிய மருந்தைத் தயாரிப்பதற்கு உதவும். விரைவில், 'எல்.எப்.சின் பி25'யை பயன்படுத்தி, பலவிதமான புற்றுநோய்களுக்கான மருந்துகளை தயாரிக்கவும், இரைப்பை புற்றுநோய்க்கான, 'கீமோதெரபி' சிகிச்சையிலும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு, சேன் கூறினார்.
Saturday, 9 November 2013
பசும் பால் குடிப்பதால், இரைப்பை புற்றுநோய் குணமாகும்-ஆய்வு

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment