பெரியகுளம்: கணவரின் குடிப்பழக்கத்தால் மனமுடைந்த பெண், தனது கணவரின் முதல் மனைவியின் மகளை, கழுத்தை நெரித்துக் கொலை செய்து, தானும் தற்கொலை செய்து கொண்டார். தேனி, எ.புதுப்பட்டியை சேர்ந்த, அரசு பஸ் டிரைவர், சின்னத்துரை, 48. இவரது மனைவி அறிவுச்செல்வி, 15 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இதயக்கனி என்பவரை சின்னத்துரை, இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு, இரு மகன்கள் உள்ளனர். சின்னதுரையின் முதல் மனைவியின் மகள், சுரேகா, 21, தேனி, தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்தார். மதுபழக்கம் உள்ள சின்னத்துரைக்கும், இதயக்கனிக்கும், அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மனம் வெறுத்த இதயக்கனி, நேற்று அதிகாலை, தூங்கிக் கொண்டிருந்த சுரேகாவை, சுடிதார் துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்து, சேலையில் தூக்கு மாட்டி, தானும் தற்கொலை செய்து கொண்டார்; போலீசார் விசாரிக்கின்றனர்.
Tuesday, 19 November 2013
கணவரின் குடிப்பழக்கத்தால் விபரீதம்: கல்லூரி மாணவியை கொன்று சித்தி தற்கொலை
பெரியகுளம்: கணவரின் குடிப்பழக்கத்தால் மனமுடைந்த பெண், தனது கணவரின் முதல் மனைவியின் மகளை, கழுத்தை நெரித்துக் கொலை செய்து, தானும் தற்கொலை செய்து கொண்டார். தேனி, எ.புதுப்பட்டியை சேர்ந்த, அரசு பஸ் டிரைவர், சின்னத்துரை, 48. இவரது மனைவி அறிவுச்செல்வி, 15 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இதயக்கனி என்பவரை சின்னத்துரை, இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு, இரு மகன்கள் உள்ளனர். சின்னதுரையின் முதல் மனைவியின் மகள், சுரேகா, 21, தேனி, தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்தார். மதுபழக்கம் உள்ள சின்னத்துரைக்கும், இதயக்கனிக்கும், அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மனம் வெறுத்த இதயக்கனி, நேற்று அதிகாலை, தூங்கிக் கொண்டிருந்த சுரேகாவை, சுடிதார் துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்து, சேலையில் தூக்கு மாட்டி, தானும் தற்கொலை செய்து கொண்டார்; போலீசார் விசாரிக்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment