சென்னை: மாமல்லபுரம் கடற்கரை சாலையில் உள்ள ஒரு விடுதி அறையில் கடந்த 17ம் தேதி இளம்பெண் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுபற்றி, மாமல்லபுரம் போலீசார் விசாரித்தனர்.கொலை செய்யப்பட்ட பெண், திருவாரூர் மாவட் டம், பூந்தோட்டம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணதாஸ் என்பவர் மகள் பிரியா (22) என்றும், சென்னை வடபழனியில் ஒரு துணிக்கடையில் வேலை செய்ததும் தெரிய வந்தது. திருவாரூர் மாவட்டம், பைங்கநாடு பகுதியை சேர்ந்த வீரசேனன் மகன் மணிமாதவன் (27) என்பவரை நேற்று கைது செய்தனர்.விசாரணையில், வால்பாறை பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட்டில் மணிமாதவன் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்தார்.
அப்போது, பிரியாவுடன் பழக் கம் ஏற்பட்டது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பிரியா கர்ப்பம் ஆனார். கருவை கலைத்த தால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டு, கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மேலும், பிரியாவுக்கு ஏற்கனவே திருமணமாகி கணவனை பிரிந்து வாழ்ந்ததும், அதை மறைத்து மணிமாதவனை திருமணம் செய்து கொண்டதும் தெரிந்தது. இதுபற்றி பிரியாவிடம் கேட்டபோது, மீண்டும் சண்டை ஏற்பட்டது.இதையடுத்து, பிரியா சென்னைக்கு வந்து வேலை செய்துள்ளார். அவரை பின்தொடர்ந்து மணிமாதவனும் சென்னை வந்து, வளசரவாக்கத்தில் தங்கியிருந்து தனியார் கழிவுநீர் அகற்றும் லாரியில் கிளீனராக வேலை பார்த்தார். வடபழனியில் வேலை பார்க்கும் பிரியாவை கண்காணித்தார்.
அப்போது, பிரியா பல ஆண்களுடன் நெருக்கமாக பழகியது தெரிந்தது. இதனால், பிரியாவை பழிவாங்குவதற்காக, அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். மீண்டும் நாம் ஒன்று சேர்ந்து குடும்பம் நடத்தலாம். இனி நமக்குள் எந்த பிரச்னையும் வராது என கூறியுள்ளார். இருவரும் ஒன்று சேர்ந்தனர். இந்நிலையில், கடந்த 17ம் தேதி மாமல்லபுரம் வந்தனர். விடுதியில் அறை எடுத்துவிட்டு, வெளியே சுற்றினர். மதியம் அறைக்கு வந்ததும், அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது, பிரியாவை சரமாரியாக அடித்து, தலையை சுவரில் மோதி கொன்றார் என தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment