Wednesday, 13 November 2013

தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு வெகுமதி



வியாபாரத்தை அதிகரிக்க சில நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி, பரிசுகள் அல்லது வெகுமதி வவுச்சர் வழங்கி ஈர்க்கின்றன. ஆனால் இங்கிலாந்து நாட்டில் குழந்தைகளுக்கான பொருட்களை விற்பனை செய்யும் பிரபல நிறுவனமோ ஒரு பொதுநோக்கத்திற்காக வெகுமதி வழங்கி வருகிறது. அதாவது தாய்ப்பால் கொடுப்பதை ஊக்கப்படுத்துவதற்காக இதை அறிமுகம் செய்துள்ளார்கள்.
அதன்படி குழந்தைக்கு 6 வாரம் வரையில் தாய்ப்பால் புகட்டும் பெண்களுக்கு ரூ.12 ஆயிரமும், 6 மாதங்கள் வரையில் பால் கொடுக்கும் பெண்களுக்கு கூடுதலாக ரூ.8 ஆயிரமும் வெகுமதியாக (கிப்டு வவுச்சர்) வழங்கப்படும். இங்கிலாந்து நாட்டிலேயே தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம் குறைவாக இருக்கும் டெர்பிஷெரி, சவுத் யார்க்ஷெரி ஆகிய நகரங்களில் இத்திட்டத்தை அமல்படுத்தி இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment