Tuesday, 5 November 2013

தாயின் தவறான நடத்தையை எதிர்த்த சிறுவன் சித்திரவதை

மூணாறு காலனியைச் சேர்ந்த ஒரு பெண், நகரில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு, கணவரும்,14 மற்றும் 13 வயதில் 2 மகன்களும் உள்ளனர். 2 மகன்களும், மூணாறில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், படிக்கின்றனர். இந்நிலையில், காலனியில் வசிக்கும் திருமணமான வேறொருவருடன், 2 சிறுவர்களின் தாய்க்கு கள்ளத் தொடர்பு இருந்தது. இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, எங்காவது சென்று, சேர்ந்து வாழ திட்டமிட்டனர். பெண்ணின் 2 மகன்களையும், கள்ளக்காதலன் ஏற்றுக் கொண்டதால், அவர்களையும் தன்னுடன் அழைத்துச் செல்ல, பெண் தயாரானார். திட்டமிட்டபடி, நேற்று முன்தினம் இரவு, வீட்டை விட்டு வெளியேற, மகன்களை அழைத்தபோது, மூத்த மகன் சம்மதித்துள்ளான். இளைய மகன் மறுத்து விட்டான். இதனால் ஆத்திரமடைந்த பெண், இளைய மகனை துன்புறுத்தியுள்ளார். அந்த சிறுவன், தனது தாயின் செயல் குறித்தும், தன்னை துன்புறுத்தியது குறித்தும், "சைல்ட் லைன்' அமைப்பின் முக்கிய பிரமுகர்களிடமும், மூணாறு டி.எஸ்.பி.,சஜியிடமும் புகார் அளித்தான். போலீசார் அந்தபெண், அவரது கணவர், தாய், சகோதரர்கள் மற்றும் கள்ளக் காதலன் ஆகியோரை அழைத்து பேசினர். அப்போது கணவருடன் சேர்ந்து வாழ பெண் சம்மதித்ததால், கள்ளக் காதலனை போலீசார் எச்சரித்து அனுப்பினர். இதனிடையே, சிறுவன் பெற்றோருடனும் செல்ல மறுத்து விட்டான்.போலீசாரும், "சைல்ட் லைன்' முக்கிய பிரமுகர்களும் சிறுவனுக்கு "கவுன்சிலிங்' நடத்தி, பெண்ணின் தாயுடன் (பாட்டி) அனுப்பி வைத்தனர்.

No comments:

Post a Comment