Saturday, 9 November 2013

சீன சிறுவர்களுக்கு பாலியல் கல்வி: 'கார்ட்டூன் வீடியோ


சீனாவில் சமீப காலமாக சிறுவர், சிறுமியர் பாலியல் தொந்தரவுக்கு ஆளாவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன. சிறுவர், சிறுமியருக்கு இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, பாலியல் கல்வியைப் போதிக்கும் நடவடிக்கையில், தனியார் நிறுவனம் இறங்கியுள்ளது. இந்நிறுவனத்தின் சார்பில் வீடியோ காட்சி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், சிறுவர் - சிறுமியருக்கு பாலியல் கல்வியை கற்றுத் தரும் அனைத்து அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. கார்ட்டூன் படங்களின் மூலம் விளக்கப்பட்டுள்ள இந்த வீடியோவில், மனிதர்களின் மர்ம உறுப்புகள், அவற்றில் ஏற்படும் உணர்ச்சிகள், குழந்தை பிறப்பு ஏற்படும் முறை போன்ற முக்கிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில், மர்ம உறுப்புகளை, மற்றவர்கள் தீண்ட அனுமதிக்கக் கூடாது என்றும் கற்றுத் தரப்பட்டுள்ளது. 'இன்றைய சிறுவர்களுக்கு இந்த வீடியோ காட்சிகள் மிக அவசியமானவை' என, இதை வடிவமைத்தவர் கூறியுள்ளார். பெற்றோரும், தங்கள் பிள்ளைகளுக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகளில் இருந்து தங்களை காத்துக் கொள்வது பற்றி கற்றுத் தர வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment