Wednesday, 20 November 2013

21 பெண் நோயாளிகளிடம் தவறாக நடந்துகொண்ட மயக்கமருந்து நிபுணர்

கனடாவில் 21 பெண் நோயாளிகளிடம் தவறாக நடந்துகொண்ட மயக்கமருந்து நிபுணருக்கு விரைவில் தண்டனைகனடா நாட்டின் டொராண்டோ நகரில் உள்ள நார்த் யார்க் பொது மருத்துவ மனையின் அனெஸ்தீசியா மருத்துவ நிபுணராக ஜார்ஜ் தூட்நாட் கடந்த 2010-ம் ஆண்டுவரை பணியாற்றினார். அப்போது வாயுப்பிடிப்பு மற்றும் மருந்துகளின் பக்க விளைவு காரணமாக உணர்வற்ற நிலையில் வரும் நோயாளிகளுக்கு அவர் சிகிச்சை அளித்துள்ளார். 

அப்போது மயங்கமருந்து நிபுணரான ஜார்ஜ், பெண் நோயாளிகளிடம் மயங்கமருந்து சிகிச்சை அளித்து ஆபரேசன் செய்யும்போது, பாலியல் தொந்தரவு செய்துள்ளார் என்று குற்றம்சாட்டப்பட்டது. இதன் மீதான விசாரணை நேற்று ஒண்டாரியோ நீதிமன்றத்திற்கு வந்தது. 

அப்போது பெண் நோயாளிகளை முத்தமிடல், கட்டிப்பிடித்தல், வாய்வழி செக்ஸ் வைத்துக்கொள்ளல் போன்ற நடவடிக்கைகளில் ஜார்ஜ் ஈடுபட்டார் என்று கூறப்பட்டது. நோயாளிகளால் நகர முடியாத நிலையில் இருந்தாலும், என்ன நடக்கிறது என்பதை அவர்களால் தெரிந்துகொள்ள முடிந்தது என்றும் அப்போது எடுத்துரைக்கப்பட்டது. 

ஆனால், ஞாபக உணர்வை தூண்டும் விதத்தில் கொடுக்கப்பட்ட மயக்க மருந்துகளால்தான் அவர்கள் தெளிவான செக்ஸ் கனவுகளை பெற்றுள்ளனர் என்று மருத்துவர் தரப்பில் வாதாடப்பட்டது. ஆராய்ச்சியாளர்களும் மயக்க மருந்துகள் ஒரு மாயத்தோற்றத்தை கொடுக்க முடியும் என்று கூறினர். இதில் சம்பந்தப்பட்ட அனைத்து பெண்களும் ஒருவரை ஒருவர் தெரிந்தவரே அல்ல என்றும் அப்போது வாதிடப்பட்டது. 

இதுதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, டேவிட் மிக்கோம்ப்ஸ், “ஜார்ஜ் ஒரு அனுபவமிக்க மருத்துவர். ஆகையால் இதுபோன்று சிறிய தாக்குதல்களை அப்போது அவர் செய்திருக்க முடியும். மயக்க மருந்து எடுத்துக்கொண்ட நோயாளிகள் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது என்பதால் இந்த காரியங்களில் ஜார்ஜ் ஈடுபட்டுள்ளார் என்றே நான் கருதுகிறேன்” என்று கூறினார்.

No comments:

Post a Comment