பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசுவதற்கு முன்பு அங்கு குண்டுகள் வெடித்தன. இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் நடந்தபோது எந்த உணர்வும் இல்லாமல் பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் ராஜ்கரில் நடந்த கட்சிக்கூட்டத்தின் விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தார் என்று நரேந்திர மோடி சாடியிருந்தார்.
இந்நிலையில், பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு நிதிஷ் குமார் பேசினார். அப்போது மோடி குறித்து அவர் கூறியதாவது:-
பாட்னாவில் நடந்த தொடர் குண்டுவெடிப்பானது மிகவும் கண்டிக்கத்தக்கது. மோடியின் பாட்னா பொதுக்கூட்டத்திற்கு மக்கள் வராத நிலையில், தீவிரவாதிகள் அங்கு குண்டை வெடித்து பாரதிய ஜனதாவிற்கு மிகவும் உதவியுள்ளனர்.
பொய்களை அறுவடை செய்வதில் மோடி வல்லவர். அவர் பகிரங்கமாக புழுகி வருகிறார். நாட்டின் பிரதமர் பதவிக்கு போட்டியிடும் அவர், தேவையில்லாமல் இதுபோன்று பேசுவதை விட்டுவிட்டு, அவருக்கு தெரிந்த சமூக, பொருளாதார பிரச்சினைகள் மற்றும் வெளியுறவு கொள்கை குறித்து பேசவேண்டும்.
அவர் மீண்டும் ஒரு பொய்யை சொல்லியிருக்கிறார். குண்டுகள் வெடித்த அக்டோபர் 27-ம் தேதி அன்று முங்கரில் நடந்த யோக நிகழ்ச்சியில் கலந்துகொள்வதை ரத்துசெய்துவிட்டு ராஜ்கருக்கு சென்றுவிட்டேன். பின்னர் அங்கிருந்து ராஜ்கர் சென்றேன். இதை யார் வேண்டுமானாலும் சோதித்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment