Sunday, 10 November 2013

கள்ளத்தொடர்பு வலைதளத்துக்கு சிங்கப்பூர் அரசு தடை

கள்ளத்தொடர்பு வலைதளத்துக்கு சிங்கப்பூர் அரசு தடை

கனடாவை சேர்ந்த ஒரு பிரபல வலைதள நிறுவனம் (வெப்சைட்) கணவனுக்கு துரோகம் செய்யும் மனைவிகளும், மனைவிக்கு துரோகம் செய்யும் கணவன்களும் தனிமையில் சந்தித்து கள்ளத் தொடர்பு வைத்துக் கொள்ளும் சேவையை செய்து வருகிறது.

மேற்கத்திய நாடுகளில் தற்போது பரவலாகி வரும் இந்த 'சீட்டிங்' கலாசாரத்தை கடைசரக்காக்கி லாபம் பார்க்கும் அந்த வலைதளம், இந்தியா உள்ளிட்ட ஏராளாமான நாடுகளில் பிரத்யேக 'சேவை'யை செய்து வருகிறது.

இவ்வகையில், சிங்கப்பூர் மக்களுக்கு என பிரத்யேக சேவையை தொடங்க இருப்பதாக சமீபத்தில் அந்த நிறுவனம் விளம்பரப்படுத்தியிருந்தது.

இந்த விளம்பரத்தை கண்டு கொதிப்படைந்த சிங்கப்பூர் மந்திரிகள் உள்ளிட்ட பலர், 'இந்த வலைதளத்திற்கு அனுமதி அளித்தால் சிங்கப்பூர் மக்களின் குடும்ப உறவுகளும், தார்மீக நெறிமுறைகளும் சீரழீந்து சிதைந்து விடும்.

எனவே, இந்த வலைதளம் சிங்கப்பூரில் கால் பதிக்க இடமளிக்காத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதனையடுத்து, மேற்கண்ட வலைதளத்துக்கு தடைவிதித்துள்ள சிங்கப்பூர் அரசு, இந்த வலைதளத்தை தடுக்கும்படி இணையதள தேடு இயந்திர நிறுவனங்களை கேட்டுக் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment