Tuesday, 12 November 2013

விசாரிக்காமல் கைது செய்யக் கூடாது: அனைத்து குற்றங்களுக்கும் எப்.ஐ.ஆர். அவசியம்- சுப்ரீம் கோர்ட்

விசாரிக்காமல் கைது செய்யக் கூடாது: அனைத்து குற்றங்களுக்கும் எப்.ஐ.ஆர். அவசியம்- சுப்ரீம் கோர்ட்

அனைத்து குற்றங்களுக்கும் எப்.ஐ.ஆர். பதிவு செய்வது அவசியம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தில் கடந்த 2008–ம் ஆண்டு 6 வயது குழந்தை கடத்தப்பட்டது தொடர்பாக தந்தை போலீசில் புகார் செய்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்ய லஞ்சம் கேட்டனர்.
இதையடுத்து காவல்துறை சீர்திருத்தம் தொடர்பாக சுப்ரீம் கோட்டில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது எப்.ஐ.ஆர். பதிவு செய்வதன் அவசியம் பற்றி சுப்ரீம் கோர்ட்டு புதிய அதிரடி உத்தரவுகள் பிறப்பித்தது. அதன் விவரம் வருமாறு:–
ஒவ்வொரு குற்றத்துக்கும் எப்.ஐ.ஆர். எனப்படும் முதல் தகவல் அறிக்கை மிகவும் அவசியம். குற்றங்களின் தன்மையைப் பொறுத்து எப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும். குற்றச்சாட்டுகளுக்கான முதல் படியை அதில் எழுதி நிரப்ப வேண்டும்.
திருமணம் தொடர்பான புகார்கள், சொத்து தகராறு, ஊழல் குற்றச்சாட்டுகள் போன்றவற்றில் போலீசார் ஆரம்ப கட்ட விசாரணை நடத்திய பின்னரே எப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும்.
குற்றச்சாட்டுக்கான சில ஆதாரம் சிக்கினாலும் அதன் உண்மைத்தன்மையை ஆராயாமல் நடவடிக்கை எடுக்க கூடாது. எப்.ஐ.ஆர். பதிவிற்கு முன் போலீசாரின் விசாரணை அர்த்தமற்றது.
எப்.ஐ.ஆர். பதிவு செய்யாத பட்சத்தில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கலாம். எப்.ஐ.ஆர். பதிவு செய்த 7 நாளில் விசாரணையை முடிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்கள்.

No comments:

Post a Comment