Tuesday, 19 November 2013

குடிபோதையில் வாகனம் ஓட்டுவோர் 27 சதவீதம்



புதுடில்லி: நாடு முழுவதும் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி குடிபோதையில் வாகனம் ஓட்டுவோரின் எண்ணிக்கை 27 சதவீதம் பேர் என கண்டறியப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ராஜஸ்தான், மகாராஷ்டிரா,ஆந்திரா உட்பட 16 மாநிலங்களில் சாலை போக்குவரத்து கல்வி நிறுவனம் (ஐ.ஆர்.டி.இ) மற்றும் மத்திய அரசின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சார்பில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 27 சதவீதம் பேர் குடிபோதையில் வாகனம் ஒட்டுவதாகவும், 29 சதவீதம் பேர் தூக்கமி்ன்மை, 12 சதவீதம் பேர் மன அழுத்தம் 4 சதவீதம் பேருக்கு நிறக்குருடு இருப்பது கண்டறியப்பட்டது. பெரும்பாலான வண்டிகளில் கிளீனர்கள் இல்லாமல் டிரைவர்கள் மட்டுமே வண்டிகளை இயக்குவது. குறைவான சம்பளம் மற்றும் 
80 சதவீதத்திற்கும் மேல் கிளீனர்கள் டிரைவர்களாக பதவி உயர்வு பெறுவதால் டிரைவர்கள் பற்றாக்குறை போன்றவை காரணமாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment