Wednesday, 20 November 2013

ரெயில் பெட்டிகளின் கூரைகளில் ஏறினால் சிறை தண்டனை



போராட்டங்களின் போது ரெயில் கூரைகளின் மீது ஏறக்கூடாது. அப்படி மீறி ஏறினால் அவர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
25 ஆயிரம் வோல்ட்
சமீபகாலமாக பல்வேறு போராட்டங்களின் போது போராட்டத்தில் கலந்துகொள்பவர்கள் மின்மயமாக்கப்பட்ட ரெயில் தடங்களில் ரெயில் என்ஜின்கள் மற்றும் கூரைகளின் மீது ஏற முயற்சித்து வருகிறார்கள்.
மின்மயமாக்கப்பட்ட ரெயில் தடங்கள் 25 ஆயிரம் வோல்ட் மின்சக்தி கொண்டவையாக இருப்பதால், அத்தகு மின்தடங்களின் அருகில் 2 மீட்டர் தொலைவுக்குள் வருபவர்களுக்கு கடும் மின் அதிர்ச்சி ஏற்படலாம் என்பதை பொதுமக்கள் கவனத்திற்கு கொண்டுவரப்படுகிறது.
சிறை தண்டனை
ரெயில் என்ஜின்களில் மேற்பகுதியும் 25 ஆயிரம் வோல்ட் மின்சக்தியில் இயங்குவதால் ரெயில் என்ஜின்களின் கூரை மேல் ஏற முயற்சிப்பவர்கள் மீது மின்சாரம் தாக்க வாய்ப்புள்ளது. அது போலவே ஒரு குறிப்பிட்ட மின் கம்பி அணைக்கப்பட்டிருந்தாலும், அருகில் உள்ள மின்கம்பியில் உள்ள மின்சாரம் அவர்களை தாக்க வாய்ப்புள்ளது.
எனவே, தங்களது தனிப்பட்ட பாதுகாப்பை கருத்தில் கொண்டு இத்தகு போராட்டங்களின் போது ரெயில் என்ஜின்கள் மற்றும் ரெயில் பெட்டிகளின் கூரைகளின் மீது ஏறுவதையும், மின்கம்பிகளுக்கு அருகில் வருவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் இத்தகு செயல்கள் இந்திய ரெயில்வே சட்டத்தின் கீழ் சிறை தண்டனை மற்றும் பெனால்டி விதிக்கத்தக்க தண்டனைக்குரிய செயலாகும் என்பதும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment